Apr
10
2011
A wise man once sat in the audience & cracked a joke. All laughed like crazy. After a moment he cracked the same joke again and a little less people laughed this time. He cracked the same joke again & again, When there was no laughter in the crowd, he smiled and said
*”When u can’t laugh on the same joke again & again, then why do u keep crying over the same thing over and over again……*
Jan
26
2011

தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – 6
முட்டை 1
சின்ன வெங்காயம் – 6
மிளகு – 1/4 தே.கரண்டி
சீரகம் – 1/4 தே.கரண்டி
கடுகு – 1 தே. கரண்டி
உ. பருப்பு – 1 தே.கரண்டி
கருவேப்பிலை – கொஞ்சம்
உப்பு, எண்ணெய் – தே. அளவு
எலுமிச்சம் சாறு – கொஞ்சம்
செய்முறை :
1. வெண்டைக்காயை கழுவி, துடைத்து நீள்வாக்காக கொள்ளவும். அப்பத்தான் வழவழப்பு இல்லாமல் இருக்கும். சட்டியில் எண்ணெய் இல்லாமல் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
2. வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
4. பின்னர், வெண்டைக்காய், உப்பு, கொஞ்சம் தண்ணீர் விட்டு லேசாக எலுமிச்சை சாறு ஊற்றி பிரட்டவும்.
5. மிளகு, சீரகம் இவற்றை இடித்துக் கொள்ளவும். அதை முட்டையுடன் சேர்த்து அடித்து வெண்டைக்காய் பிரட்டலுடன் ஊற்றவும். முட்டை வெந்தவுடன் நன்கு பிரட்டி எடுக்கவும்.

)
Jan
26
2011

தேவையான பொருட்கள் :
நெத்திலி கருவாடு – 1 1/2 பிடி
காய்ந்த மிளகாய் – 8 அல்லது 10
சின்ன வெங்காயம் – 6
கருவேப்பிலை – 6
புளி – கொஞ்சம்
உப்பு, எண்ணெய் – தே.அளவு
செய்முறை :
1. சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை இவற்றை முதலில் வதக்கிக் கொள்ளவும்.
2. நெத்திலிகளை மொறு மொறுவென பொரித்துக் கொள்ளுங்கள்.
3. Blender லில் வதக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை கொற கொறவென அரைத்துக் கொள்ளவும்.
4. பின்னர் தனியே பொரித்த நெத்திலி கருவாட்டையும் கொற கொறவென அரைத்துக் கொள்ளவும்.
5. சட்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அரைத்த கலவையைப் போட்டு, கிளரவும். அதனுடன் கொஞ்சம் புளி தண்ணீரையும், உப்பையும் சேர்க்கவும்.
6. இறக்கி வைக்குமும் எலுமிச்சை, calamansi சாற்றைச் சேர்க்கவும். சுவை கூடுதலாக இருக்கும்.
Jan
20
2011

எலும்புகள் அகற்றப்பட்ட கோழி துண்டுகள் – 500 gram
எண்ணெய் – 2 மே. க
இடித்த சீரகம் – 1 தே. க
வெட்டிய பச்சை மிளகாய் – 1 அல்லது 2
வெட்டிய வெங்காயம் – 1
இடித்த பூண்டு - 1 தே. க
வினிகர் - 2 தே.க
தயிர் – 1 கப்
எலுமிச்சை சாறு – 1 தே. க
உப்பு – தே. அ
செய்முறை :
1. கோழியைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்.
2. அரைத்த கலவையில் கோழியை ஊறவிடவும்.
3. 40 நிமிடங்களுக்கு குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும்.
4. சட்டியில் எண்ணெய் விட்டு பொன்னிரமாகும் வரை கோழித் துண்டுகளைப் பொறிக்கவும்.
5. பொறித்தெடுத்த கோழி பகோராவை புதினா சட்னியோடு அல்லது தக்காளி சட்னியோடு சுவைக்கலாம்.
Jan
20
2011

சுவையாக சுலபமாக சமைக்க ஒரு சமையல் குறிப்பு
வட இந்தியர்கள் அதிகம் விருந்து நிகழ்ச்சிகள்ல இந்த சமையல் கண்டிப்பாக இருக்கும்.
தே.பொ :
பாஸ்மதி அரிசி – 1 கப்
சீரகம் – 1 தே.க
முந்திரிபருப்பு – 2 மே.க
கருப்பு மிளகு – 3
பிரியாணி இலை - 3
கிராம்பு – 3
பட்டை – 2
வெட்டிய வெங்காயம் – 1
நெய் – 2 தே. கரண்டி அல்லது எண்ணெய்
உப்பு – தே. அளவு
செய்முறை :
1. அரிசியை சுத்தம் செய்து, 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பானையில் அல்லது குக்கரில், நெய் அல்லது எண்ணெய் விட்டு முந்திரிபருப்பை பொரித்து எடுக்கவும்.
3. மீதமிருக்கும் நெய் அல்லது எண்ணெயில் வெட்டிய வெங்காயம், பிரியாணி இலை, சீரகம், பட்டை, கருப்பு மிளகு, கிராம்பு, இவற்றைப் போட்டு வதக்கவும்.
4. அதோடு ஊர வைத்திருக்கும் அரிசி, தண்ணீர், உப்பு சேர்த்து பொரித்தெடுத்த முந்திரிபருப்புகளையும் சேர்த்து சோற்றை சமைத்து எடுக்கவும்.
சுவையான சீரக சோறு தயார். காரமான குழம்போடு சேர்த்து சாப்பிட.. ம்ம்ம்.. நல்லா இருக்கும்.
Jan
14
2011

இந்தப் பொங்கல்ல இருந்து ஒலியில பல நல்ல புதிய மாற்றங்கள் வர இருக்கு.. அப்ப இது வரைக்கும் வந்ததெல்லாம் சரியில்லையான்னு கேட்டீங்கன்னா.. நான் அழுதுடுவேன்..
) ஏன் நல்ல மாற்றம்ன்னு நான் சொன்னதுக்கு உள்காரணம் இருக்கு,. அதை இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்களே தெரிஞ்சிக்குவீங்க..
கொஞ்ச நாளாக.. என் குரலை வானொலியில கேட்டிருப்பீங்க. ஆனா.. ஏன் நிகழ்ச்சி ஒன்னும் படைக்கலைன்னு கேட்டு மின்னஞ்சல் குவிஞ்சிருச்சு.. நல்ல சேதிதான்!! “எனக்கில்ல”.. ஒலிக்கு!!
ஒலியின் புத்தம் புதிய இணையதளம் இந்த பொங்கல்ல இருந்து வெளியாக இருக்கு!! அதற்கான வேலையிலதான் ராத்திரி பகலா.. விமலா உழைச்சா.. (இது கொஞ்சம் ஓவர்தான்)
இது முதல் நல்ல மாற்றம்! ரொம்ப நாளுக்குப் பிறகு புது தளத்துல ஒலி நிகழ்ச்சிகளைப் பற்றியும் ஒலி படைப்பாளர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கு.
ஆ.. இன்னுமொறு நல்ல செய்தி என்னன்னா?? விமலா.. நல்ல்ல்லா தூங்கப் போறா!!
ஆமாங்க.. ஒரு வருஷமா காலையில 6 மணியிலிருந்து 10 மணிவரைக்கும் நிகழ்ச்சியைப் படைச்சி.. தூக்கம் போச்சு.. ஏன்னா.. நான் ஒரு night bird!
அதுனால, தூக்கம் பத்தாம இருந்தேன்.. இப்ப காலையில 10 மணி வேலை!! ஹாய் ஜாலி!!
இன்னும் கொஞ்ச நேரத்துல நான் கெளம்பியாகனும். Dont be jealous ah!!நான் இப்ப Shah Rukh Khan, Akshay Kumar, Aishwarya Rai Bachchan, Priyanka Chopra, Arjun Rampal, Deepika Padukoneனை Zee Awards Press Meetல பார்க்கப் போறேன். இவுங்க எல்லாரும் வருவாங்களான்னு தெரியல.. பார்த்தா நீங்க ரொம்ப கேட்டதா சொன்னீங்கன்னு சொல்றேன்..
ஞாயிற்றுக்கிழமை இன்னுமொறு பிரபலத்தைப் பேட்டி எடுக்கப் போறேன். அந்த சிறுத்தையைப் பார்த்துட்டு வந்து கதையைச் சொல்றேன்…
இவ்வளவு ஹோட் ஹோட் ஹோட்டான் விஷயங்கள் எல்லாம் காத்திருக்கும் போது என் பொங்கல் சும்மா அதிருதுங்க!!
)
Nov
23
2009
வணக்கம். இது மீடியகோர்ப் வானொலியின் வலைப்பூ. இதன் வழி படைப்பாளர்கள் நாங்கள் எங்களைக் கவர்ந்த விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்ளவுள்ளோம். நன்றி